×

பொங்கல் பண்டிகை.. முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன!!

சென்னை: பொங்கல் பண்டிகையை ஒட்டி தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களுக்கான முன்பதிவு முடிந்தது. 2024ம் ஆண்டில் ஜனவரி 14ம் தேதி போகி பண்டிகை, ஜன.15ம் தேதி பொங்கல் பண்டிகை, 16ம் தேதி மாட்டுப் பொங்கல், 17ம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு ஜன.13ம் தேதி சனிக்கிழமை முதல் தொடர்ச்சியாக 5 நாட்கள் அரசு விடுமுறையாக வருகிறது. விரைவு ரயில்களில் பயணிக்க 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளும் வசதி இருக்கிறது. எனவே, சொந்த ஊர்களுக்கு செல்வோர் வசதிக்காக விரைவு ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களுக்கான முன்பதிவு முடிந்தது. பொதிகை, பாண்டியன், நெல்லை, முத்துநகர் உள்ளிட்ட ரயில்களில் முன்பதிவு முடிந்து காத்திருப்பு பட்டியலுக்கு சென்றது.காலை 8 மணி முதலே ஏராளமானோர் முன்பதிவு செய்ததால் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன. இதனிடையே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரயில் பயணிகளின் வசதிக்காக ஜனவரி 12ம் தேதிக்கு நாளை மறுநாள், ஜனவரி 13ம் தேதி பயணிக்க வரும்15ம் தேதியிலும் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்யலாம். பொங்கலுக்கு முந்தைய நாள், அதாவது ஜன.14ம் தேதி பயணிக்க செப்.16ம் தேதி டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது. ரயில் டிக்கெட் முன்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கும். இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசி இணையதளம் வழியாகவோ அல்லது டிக்கெட் கவுண்டர்களிலோ முன்பதிவு செய்யலாம்.

The post பொங்கல் பண்டிகை.. முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன!! appeared first on Dinakaran.

Tags : Pongal Fest ,southern districts ,Chennai ,southern ,Pongal ,Pongal Festive ,Dinakaran ,
× RELATED சென்னை சேப்பாக்கத்தில்...